முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுகம்
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடும் என மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிவித்ததை அடுத்து அனைத்து இடங்களிலும் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி பொள்ளாச்சியில்
அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் இக்பால் வரவேற்றார்.
பொள்ளாச்சி நகராட்சியில் முதற்கட்டமாக 14வது வார்டுக்கு உஸ்மான் அலி, 16வது வார்டுக்கு முகம்மது பாரூக்,
29வது வார்டுக்கு ஜாகிர்நிசா ஆகிய மூன்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
பொருளாளர் ரஹ்மத்துல்லா நன்றியு கூறினார்.