அரசு பேருந்து கிளம்பத் தாமதமானதை கேட்ட பெண்ணை, ஓட்டுநர் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம்.
சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருமதா. இவரும் இவருடைய கணவர் செந்திலும் பாரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர்.
அங்கு 5.10 க்கு பெரும்மாக்கத்தில் இருந்து பாரிஸ் செல்ல வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் கிளம்பவில்லை. இதுகுறித்து மருமதா ஓட்டுநரிடம் கேட்டபோது, அதிகார தோரணையில் காத்திருக்கங்கள் இல்லையேல் இறங்கி செல்லுங்கள் என ஒருமையில் பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் இருவரையும் தாக்கியதில் முருமதா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட பொது மக்கள் பேருந்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயணிகளை அலைக்கழிப்பதாகவும், பேருந்தை தாமதமாக எடுப்பதாகவும், பயணிகளிடையே அதிகார தோரணையில் பேசுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செய்தியாளர் ரமேஷ்,
சோழிங்கநல்லூர்.