விறுவிறுப்பானது தேர்தல் களம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது.
தேர்தல் தேதி அறிவித்ததும் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. இதன்காரணமாக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஆங்காங்கே ஒரு சில சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர்.
இந்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 4ம் தேதி (நாளை) இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே நாளையதினம் வேட்புமனுத்தாக்கல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரியவருகிறது.