பொள்ளாச்சி நகராட்சியில் களம் இறங்கிய ம.நீ.ம.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நேற்று ஒரே நாளில் 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளரான பாபு பிரசாந்த் 35வது வார்டில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் அக்கட்சியைச் சேர்ந்த சசிகலா (25வது வார்டு), ஷர்மிளா (34வது வார்டு), ஜெயக்குமார் l20வது வார்டு), ரமேஷ் (36வது வார்டு), கார்த்திகேயன் (22வது வார்டு) ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்று (4ம் தேதி) இறுதி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.