வாக்காளர் பட்டியலில் பெயர் மாயம்: அ.தி.மு.க. வேட்பாளர் அதிர்ச்சி
நாகை நகராட்சியின் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவல்லி நகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த வந்தார். அப்போது வேட்புமனுவை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளர் பட்டியலில் அமிர்தவல்லியின் பெயர் இல்லை என்றும், கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று இறந்தவர் என்று கூறி நீக்ப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் நாகையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான, வாக்காளர் பட்டியல் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தலுக்காக 4வது வார்டு சரிபார்ப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் பின்னர் அமிர்தவல்லியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதையடுத்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
செய்தியாளர் ராஜேஷ்,
நாகப்பட்டினம்.
Nag