சசிகலா பொதுச்செயலாளர் ஆகும்வரை… சைவம்
சசிகலா அ.தி.மு.க. விற்கு பொதுச் செயலாளராக ஆகும் வரை தான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று அவரின் தீவிர விசுவாசி சபதம் எடுத்துள்ளார்.
சின்னம்மா பேரவையின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்து. இவர் தீவிர அசைவப் பிரியர். தினந்தோறும் உணவில் ஏதாவது ஒரு அசைவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் சசிகலாவின் தீவிர விசுவாசியும் ஆவார்.
அசராத களப்பணிக்காக இவர் சின்னம்மா பேரவையின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சசிகலா அ.தி.மு.க.விற்கு பொதுச் செயலாளராக வந்தே ஆகவேண்டும் என்று இவர் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் சசிகலா அ.தி.மு.க.விற்கு பொதுச்செயலாளராக ஆகும்வரை தான் விரும்பி உண்ணும் அசைவத்தை தவிர்க்கப் போவதாக உறுதி எடுத்துள்ளார். சிவகாசியில் உள்ள கோவில் ஒன்றில் சத்தியம் செய்து தான் சைவம் மட்டுமே சாப்பிட போவதாகவும், சசிகலா அ.தி.மு.க.விற்கு பொதுச்செயலாளராக ஆகும் நாளில்தான் அசைவம் உண்பேன் என்றும் சபதம் எடுத்துள்ளார்.