கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு: கலெக்டர் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் விசாகன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3 நகராட்சி, 23 பேரூராட்சிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இரவு பகலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பணப்பட்டுவாடா குறித்து பொதுமக்களிடம் இருந்து நமக்கு எந்தப் புகாரும் வரவில்லை. என்றார்.
செய்தியாளர் ரியாஸ்,
திண்டுக்கல்.