திமுக வேட்பாளர் மனு நிராகரிக்க யோசனை: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் பரிசீலனை நாளான இன்று அவரது மனுவில் ஒரு இடத்தில் கையொப்பம் இல்லை என்று கூறி, அதை நிராகரிக்க அதிமுகவினர் வலியுறுத்தினர்.
அவரது மனுவை நிராகரிக்க அதிகாரிகள் யோசனை செய்தனர்.
இதன் காரணமாக அதிமுக மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், அவரது ஆதரவாளர்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.