திருப்பூரில் சாக்கடைக்குள் சூட்கேசில்
பெண் சடலம்
திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிக்காளி பாளையம் அருகே புது ரோடு பகுதியில் சாக்கடைக்குள் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அப்பகுதியினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூட்கேசை திறந்து பார்த்ததில், நைட்டி அணிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.
இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.