விவசாயம் செழிக்க கருப்பனார் கோவிலில் சமபந்தி விருந்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பழமை வாய்ந்த கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சம்பந்தி கறி விருந்து விடிய விடிய நடைபெற்றது . வறட்சியின்றி, விவசாயம் செழித்து, மக்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி இந்த விழா நடைபெற்றது. விழாவின் இறுதியில் கருப்பனார்க்கு முப்பூஜை நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பலர் மொட்டை அடித்து நேத்திக்கடன் செலுத்தினர்.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.