2 வயது குழந்தை உலக சாதனை: கின்னஸ் சாதனை இலக்கு
2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பி. குமாரபாளையத்தை அடுத்துள்ள சடையாம்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியநாயகம். இவரது மனைவி எலிசபெத். இத்தம்பதியினருக்கு 2 வயது 5 மாதங்களே ஆன தெல்பியா என்ற மகள் உள்ளார். அக்குழந்தை 2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தை பிறந்ததில் இருந்து மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள், சில மாதங்களிலேய அவளது திறமையை கண்டு வியந்தோம். இன்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர். மேலும் எதிர்காலத்தில் கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்வதே எங்களின் நோக்கம் என்றும் கூறினர்.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.