செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் சேர்மன்கள் தீவிர பிரச்சாரம்

திண்டுக்கல் மாநகராட்சி 6வது வார்டில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் சேர்மன்கள் தீவிர பிரச்சாரம்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 6வது வார்டில் தி.மு.க. சார்பில் சரண்யா போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் முன்னாள் சேர்மன்கள் நடராஜன், சந்திரசேகர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 6வது வார்டு பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். வாக்கு சேகரிக்கும் போது, கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் கார்டுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கியது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளுபடி, அனைத்து மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயண வசதி, 32 லட்சம் கணவனை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1500 ஓய்வு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட திமுக அரசின் சாதனைகளை கூறி பொது மக்களிடையே வேட்பாளர் சரண்யா வாக்குகள் சேகரித்தார்.

செய்தியாளர் ரியாஸ்,

திண்டுக்கல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button