நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.22ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22ம் தேதி ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.