பத்து ரூபாய் நாணயம் செல்லுமா – செல்லாதா..? மத்திய அரசு அறிவிப்பு .
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் அரசுப் பேருந்துகளிலும், பெட்டி கடைகளிலும் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு உள்ள 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டபூர்வமான தொகையை பரிவர்த்தனை செய்யும் போது அந்த நாணயத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கக் கூடாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதாரி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.