பொள்ளாச்சி அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. – தி.மு.க.வில் இணைந்தார்
பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் வி.பி. சந்திரசேகர். அ.தி.மு.க. வில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து பயணித்து வந்த இவர் கடந்த 1989 மற்றும் 1991 ஆகிய இரண்டு முறை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அனைவராலும் வி.பி.சி. என்று அழைக்கப்படும் இவர்
தமிழக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழக சிறு சேமிப்புத்துறை ஆகியவற்றின் வாரியத் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வி.பி.சி. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையிலும், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் முன்னிலையிலும் தி.மு.க. வில் இணைந்தார். அப்போது கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர். ராமசந்திரன் உடனிருந்தார். தி.மு.க வில் இணைந்த வி.பி.சி. யை பொள்ளாச்சி நகர பொறுப்பாளர் வடுகை பழனிச்சாமி, நகர துணை செயலாளர் கார்த்திகேயன், கிளை செயலாளர்கள் ராஜன், பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் வி.பி. கிரி, அழகப்பன், போர்வெல் துரை, உமா மகேஸ்வரி உட்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.