உடல்நலக்குறைவால் விரக்தி – விஷம் குடித்து பெண் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி நிர்மலா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கென தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனாலும் உடல்நிலை குணமடையாததால் விரக்தியடைந்த நிர்மலா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கினார். அவரது குடும்பத்தார் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நிர்மலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் தேவராஜன்.
நாமக்கல்.