பா.ஜ.க. வேட்பாளர் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 21வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் செல்வகுமார் என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார்.
இவர் 21வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எற்படுத்தி தருதல், மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி வகுப்பு நடத்துதல், வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நல்ல குடிநீர் வசதி அமைத்து தருதல், தரமான தார் சாலை, சீரான மின் வசதி அமைத்து தருதல், நமது பகுதிகளில் உள்ள வழிப்பாட்டுத் தளங்களை புலரனமைத்து
புதுப்பித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.