சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் – தி.மு.க. வேட்பாளர் உறுதி.
பொதுக்கழிப்பிடம், வடிகால் வசதி என. சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன் என்று உறுதி கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பொள்ளாச்சி நகராட்சியின் 36வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் பி.ஏ. செந்தில்குமார் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக. தி.மு.க. வில் தீவிர களப்பணி ஆற்றி வரும்இவர் கட்சிப்பணி மட்டுமின்றி தனது வார்டு பகுதி மக்களிடமும் எவ்வித பேதமுமின்றி சகஜமாக பழகுபவர்.
வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் செந்தில்குமார் கூறுகையில், இந்த வார்டின் பல. இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக. 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அமைதி நகரில் 2 கட்டண கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே வீடுகள் தோறும் கழிப்பிடம் கட்டிக்கொடுக்க. அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.
அதேபோல் பாதாள சாக்கடை திட்ட. பணியில் பிரதான குழாய்கள் மட்டும் பதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான. இணைப்புக்கு கட்டணம் அதிகமாக. உள்ளது. கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் அதிக கட்டணம் செலுத்தி வீட்டு இணைப்பு பெறுவது சிரமம். ஆகவே கட்டணத்தை குறைத்து, பாதாள சாக்கடை திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி கழிவு நீர் முறையாக வெளியேற்றினால் இப்பகுதியை சுகாதாரம் மிக்க பகுதியாக மாற்ற முடியும்.
இதுபோன்ற செயல்படுத்தக்கூடிய. திட்டங்களையும், மக்களுக்கு அத்யாவசியமான திட்டங்களையும், தமிழகமுதல்வர் குறுகிய காலத்தில் மக்களுக்கு செய்துள்ள சாதனைகளையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.