புதிய ரேஷன் கடை – அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி.
மக்கள் சிரமத்தைப்போக்க புதிதாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பொள்ளாச்சி நகராட்சியின் 20வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆர்.எம். அருள் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இப்பகுதியில் கவுன்சிலராக இருந்தவர் என்பதால் இந்த வார்டு மக்களிடம் நன்கு அறிமுகமானவர்.
வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் ஆர்.எம். அருள் கூறுகையில், இந்த வார்டின் பல இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக குடிநீர் வினியோகத்தை சீராக்கி ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீர் கிடைக்க. அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.
கரியகாளியம்மன் கோவில் வீதி, குட்டை வீதியில் புதிதாக ரோடு வசதி செய்து கொடுப்பது, நாச்சிமுத்து வீதியில் உள்ள விநாயகர் கோவிலை சீரமைப்பது, அப்பகுதியில் உள்ள பொதுக்கிணற்றை சுத்தம் செய்து மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பன உள்ளி்ட்ட மக்களின் அத்யாவசிய பணிகளை கட்டாயம் செய்து கொடுப்பேன் என்று உறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறேன்.
குறிப்பாக இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை பெற நீண்ட தூரம் சென்று வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு இந்த வார்டுக்குள் புதிதாக ரேஷன் கடை அமைக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என்பதையும் மக்களிடம் எடுத்து கூறி வருகிறேன். ஏற்கனவே கவுன்சிலராக இருந்ததால் இப்பகுதி மக்களிடம் உரிமையோடு சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.