முழு வெற்றி அடைவோம் – முன்னாள் அமைச்சர் உறுதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி அடைவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். குறிப்பாக குடிநீர், சாலைவசதி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். நாங்கள் செய்த பணிகளை அனைத்து தரப்பு மக்களும் இன்றும் பாராட்டுகின்றனர்.
ஆகவே நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு உட்பட பலர் உடனிருந்தனர்.