ம.நீ.ம. வேட்பாளரை மக்களுக்கு அர்ப்பணித்த தந்தை
பொள்ளாச்சி நகராட்சியில் ம.நீ.ம. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அவரது தந்தை மக்களுக்காக அர்ப்பணிப்பதாக கூறி இறுதிகட்ட பிரச்சாரத்தை முடித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளரான பாபு பிரசாந்த் 35வது வார்டில் போட்டியிடோகிறார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த சசிகலா (25வது வார்டு), ஷர்மிளா (34வது வார்டு), ஜெயக்குமார் l20வது வார்டு), ரமேஷ் (36வது வார்டு), கார்த்திகேயன் (22வது வார்டு) ஆகியோரும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாபு பிரசாந்தின் தந்தையும் இயற்பியல் விஞ்ஞானியுமாகிய டாக்டர். அழகர் ராமானுஜம் நிருபர்களிடம் கூறியதாவது, ஒரு மனிதன் சமூகப் பணி ஆற்ற வேண்டும் என்றால் முதலில் அவன் வீட்டிற்கு நல்லவனாக இருக்கவேண்டும். அந்த வகையில் இவர் என் மகன் என்பதற்காக சொல்லவில்லை பாபு பிரசாத் உண்மையிலேயே மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதித்து நடப்பவன். குறிப்பாக மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடக் கூடியவன். ஆகவே தீயவற்றை ஒழித்து நல்லது நடக்க மக்களுக்காக இவரை நான் அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம், மாவட்ட அமைப்பாளர்கள் ஶ்ரீ ராதாஷா தேவியர், பஷீர், ஜெகதீஸ்வரன், முகம்மது அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் சசிகலா சண்முகசுந்தரம் , பாவா மொய்தீன், நகர செயலாளர் சிவக்குமார், சபரீஷ்வரன், ஒன்றிய அமைப்பாளர் கருப்புசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.