புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் மறுவாக்குப் பதிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை (21ம் தேதி) மறுவாக்குப் பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நாளை(21ம் தேதி) திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மறு ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்கள்
- சென்னை மாநகராட்சி:
வார்டு எண் 51,
வார்டு எண் 179, - மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி
வார்டு எண் 17, - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி
வார்டு எண் 16, - திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி
வார்டு எண் 25, இந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு பிப்.21ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார்கள். இந்த இடங்களில், வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.