பாய்லர் வெடித்து இருவர் பலி – 3 பேர் படுகாயம்.
சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மூன்று பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான தனியார் தீவனம், மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் சற்று நேரத்திற்கு முன்பு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்தது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அருண்ஓரானா, பல்ஜித்ஓரான் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த பாய்லர் ஆபரேட்டர் உச்சிமேடு ரகுபதி, பந்தநல்லூர் மாரிதாஸ், திருமுல்லைவாசல் ஜாவித் ஆகிய 3 பேரையும் சக ஊழியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இதில் ரகுபதி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அனுப்பப்பட்டுள்ளார்
செய்தியாளர் ராஜேஷ்,
மயிலாடுதுறை மாவட்டம்.