செய்திகள்

தண்ணீருக்கு தகராறு – வாலிபர் கொலை

தண்ணீர் பிடிப்பதில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை – 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது

ஆனைமலையில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற 2 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவில் மண்டபம் அருகே வசித்து வந்தவர் திணேஷ். இவர் மாசாணி அம்மன் கோவில் செல்லும் வழியில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர் வசித்த வீட்டிற்கு அருகிலேயே அவரது அக்கா பரமேஸ்வரி வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பரமேஸ்வரிக்கும் அருகே வசிக்கும் அகல்யா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனது அக்காவை திட்டிய அகல்யாவை திணேஷ் திட்டியதால் தகராறு முற்றியது.
இதுகுறித்து அகல்யா கூறியதன் பேரில் அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து திணேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கமான திணேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே திணேஷ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார்
தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அகல்யா, தாயார் பானுமதி, சகோதரர் ராகவேந்திரன், இவர்களுடன் வந்த ஆண்டனி, கோகுல் குமார், ஆகாஷ், கார்த்திகேயன், ராஜ்குமார், மணிகண்டன் என 2 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button