பொள்ளாச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
பொள்ளாச்சியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க. வினர் விமர்சையாக கொண்டாடினர்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவினை மாநிலம் முழுவதிலும் அ.தி.மு.க. வினர் விமர்சையாக கொண்டாடினர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எம்.எல்.ஏ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ் ராஜா, வசந்த் மற்றும் ஆர்.எம். அருள், நீலகண்டன், அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.