பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி
கோவில்பட்டி அருகே துறையூரில் தனியார் பட்டாசு ஆலை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான செஞ்சுரி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த தொட்டம்பாட்டியை சேர்ந்த ராமர், ஜெயராஜ், குமாரகிரியை சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புதூரை சேர்ந்த கண்ணன் ஆகிய 4 பேர் பலியாகினர். தீயணைப்பு துறையினர் மற்றும் கொப்பம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் மாரிராஜா,
தூத்துக்குடி.