ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது
திண்டுக்கல் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டுக்கள் பிரகாஷ்,சக்திவேல் ஆகியோர் நேற்று பள்ளபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளபட்டியை சேர்ந்த வீரணன், சிறுமலையை சேர்ந்த பாண்டி என்பதும், இவர்கள் அனுமதியின்றி ஒற்றை குழல் துப்பாக்கி மற்றும் அதன் உபகரணங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் அவ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.