வேளாண் பட்ஜெட் – கருத்து கூற அழைப்பு
வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து கூற
விரும்புவோர் கடிதம், இ – மெயில், வாட்ஸ்
ஆப் எண் வழியே தெரிவிக்கலாம் என வேளாண் துறை அமைச்சர் பன்னீர்
செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வரும் 2022 – 23ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கலெக்டர் தலைமையில் நடந்த, விவசாயிகள் குறை தீர்வு கூட்டங்களில்
பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டங்களில் பங்கேற்க இயலாத மக்களும் தங்களின்
கருத்துகளை அரசுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகளுடன் கூடிய கடிதத்தை, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 9 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இ-மெயில் வாயிலாக அனுப்புவோர், agrisec@ tn.gov.in, agrips@tn.gov.in என்ற முகவரிகளில் அனுப்பலாம்.
மேலும், 93818 76300 என்ற வாட்ஸ் ஆப் எண் வழியாகவும், உழவன் ஆப் வழியாகவும் கருத்துகளைப் பதிவு
செய்யலாம்.
எனவே, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும்
தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்து
உள்ளார்.