விபத்தில் சிக்கியது ரேஷன் அரிசி கடத்திய லாரி..?
பொள்ளாச்சி திருச்சூர் ரோட்டில் விபத்தில் சிக்கிய ரேஷன் அரிசி கடத்திய லாரி குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி திருச்சூர் ரோட்டில் ஆலாங்கடவு பகுதி அருகே அதிகாலையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் வலது புறமாகச் சென்று தரையில் மோதி நின்றது. விபத்து நடந்ததும் லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடியதாக தெரியவருகிறது.
மேலும் லாரியில் சுமார் 12 டன் ரேஷன் அரிசி இருக்கலாம் என்றும், அதை கேரளாவிற்கு கடத்திச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் உன் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் முருகராஜ் மற்றும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். லாரியில் இருப்பது ரேஷன் அரிசி என்பதும், அது கேரளாவுக்கு கடத்த இருந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளின் மேல் 50க்கும் மேற்பட்ட கோதுமை மூட்டைகளும் இருந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.