அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்க அனுமதி வேண்டி மனு
தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. மனுவில், தென்காசி ரவுண்டானாவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனம் அளிக்கும்போது, நகரத் தலைவர் நாராயணன், துணைத் தலைவர் சொர்ண சேகர், செயலாளர் காளிமுத்து, செயற்குழு உறுப்பினர் மாரி (எ) மது மற்றும் இந்து முன்னணி சூர்யா, மாரி, செல்வம், பாலு உட்பட பலர் உடன் இருந்தனர்.