ராமேஸ்வரத்தில் மகாசிவராத்திரி மற்றும் அம்மாவாசையை முன்னிட்டு பக்தர்கள் லட்சகணக்கில் குவிந்தனர்.
கடந்த 21 தேதி முதல் ராமேஸ்வரத்தில் மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா நடைபெற்றுவருகிறது. நேற்று தேரோட்டம் விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணி முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடலில் குளித்து தங்கள் மூதாதையர்கலுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். அதன் பிறகு கோவில்கள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி அதன் பின் சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக நெருக்கடியாக இருந்தது. பாதுகாப்பு பணிகளை ராமநாதபுர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செய்திருந்தார். சுகாதாரம் மற்றும் குடிநீர் ஏற்பாடுகளை ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் மூர்த்தி, பொறியாளர் சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.