தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் மற்றும் அண்ணன் மகன் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் சிவனாரகரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்கும், அதே கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் இவரது சொந்த அண்ணன் பாண்டியன் என்பவருக்கும் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு நடுத்தெருவிற்கு வந்த செந்தில்குமாரை பாண்டியன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பாலையூர் போலீசார், பாண்டியன் மற்றும் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இடப் பிரச்னை தொடர்பாக சொந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ராஜேஷ்,
மயிலாடுதுறை.