ஆல்வா மருத்துவமனையில் லேசர் சிகிச்சை மையம் துவக்கம்
பொள்ளாச்சி ஆல்வா மருத்துவமனையில் முக அழகியலுக்கான லேசர் சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது ஆல்வா மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தலைமுடி மற்றும் முக அழகியலுக்கான லேசர் சிகிச்சை மையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
ஆல்வா மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரி தலைவர் டாக்டர். ஆல்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குநர் டாக்டர். வசந்த்குமார் ஆல்வா முன்னிலை வகித்தார். சின்னத்திரை நடிகை அஞ்சனா ரிப்பன் வெட்டி லேசர் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட லேசர் சிகிச்சை மையம் குறித்து டாக்டர். வசந்த் குமார் ஆல்வா கூறுகையில், நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத் தான்இந்த மருத்துவமனை துவங்கப்பட்டது. இன்றுவரை கிராமப்புற மக்களுக்காக சிறப்பாக மருத்துவ சேவை செய்து வருகிறோம்.
அதேபோல் நகரம், பெருநகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இது போன்ற அதி நவீன சிகிச்சைகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த லேசர் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.