தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
இந்து முன்னணியின் கோவை மண்டல பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது, ஒவ்வொருவருக்கும் அவருடைய மதத்தினுடைய பாரம்பரிய உடையை அணிவதற்கு உரிமை உள்ளது. ஆனால் ஹிஜாப் விவகாரத்தில் பொது இடங்களில்
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர் மத்தியிலே பிரிவினையை
உண்டாக்கும் செயலை வன்மையாக
கண்டிக்கிறோம்.
தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை
சேர்ந்தவர்கள் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார்கள். அதோடு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முஸ்லீம்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னார்கள் என்றால் அவர்களுடைய உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லை என சட்ட விரோதமாக பேசி இருக்கிறார்கள். ஆகவே தேவையற்ற மதமோதல்களை உருவாக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும். மக்கள் நலன் கருதி தமிழக அரசு
பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் ஆக இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறோம். ஆகவே சிறப்பு புலனாய்வு குழுவினர் முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், மாநில செயலாளர் அண்ணாதுரை, கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மற்றும் நீலகிரி
மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.