செய்திகள்

மஞ்சப்பை விழிப்புணர்வு

உலக வன நாள்: மஞ்சள் பையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

உலக வன நாளை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் சோதனைச் சாவடியில், பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை, மீண்டும் மஞ்சப்பை என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வளாகம் முழுவதும் மஞ்சள் பைகளால் அலகங்ரிக்கப்பட்டிருந்தது.

டாப்சிலிப் கோழிக்கமுத்தியைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு நடனம் ஆடினர். தொடர்ந்து கவி அருவி அருகே பள்ளி மாணவர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன், வன உதவி பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் காசிலிங்கம், மணிகண்டன், வனவர்கள் பிரபாகரன், ராஜன், சதீஷ், இளவரசி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button