மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவி உபகரணங்களுக்கு அளவெடுக்கும் முகாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவி
உபகரணங்கள் அளவெடுக்கும் முகாம் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் தலைமையில் நடைபெற்ற
இம்முகாமை, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகர் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு குழுவினர் மூலம் பொள்ளாச்சி வடக்கில் 10 மாணவர்கள், தெற்கில் 6 மாணவர்கள், ஆனைமலையில்
2 மாணவர்கள் என மொத்தம் 18 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்களுக்கான அளவு எடுக்கப்பட்டது.