பொள்ளாச்சியில் ம.தி.மு.க. சார்பில் ரத்த தான முகாம்
ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் பொள்ளாச்சி ஆண்டு இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில் தலைமை தாங்கினார். நகர செயலாளரும், நகராட்சி கவுன்சிலருமான துரை பாய் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜ், பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் தமிழ்மணி, மு.க.முத்து,
முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி. சந்திரசேகர்,
அதிபதி, நகர செயலாளர் வடுகை பழனிச்சாமி, துணைச் செயலாளர்
கார்த்திகேயன், வி.பி. கிரி,
நகராட்சி துணைத் தலைவர் கவுதம், கவுன்சிலர்கள் உமா, துரை, சுதா, பழனிச்சாமி, மணிமாலா, நாகராஜ், கவிதா, கந்த மனோகரி, கீதாலட்சுமி,
சரண்யா, டேஸ்டி பாலு, இளமாறன், தங்கவேல், பாலா கிருஷ்ணவேணி, சாந்தலிங்க குமார், பாத்திமாஅக்பர், சரிதா, பெருமாள், சண்முகப் பிரியா, ஆனந்த்,
சேக் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பிரபு,
இ.கம்யூ., வழக்கறிஞர் சண்முகம், மனிதநேய ஜனநாயக கட்சி ஜெமிஷா மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.