செய்திகள்

தேசிய செஸ் – ஜம்மு வீரர் சாம்பியன்

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில்
ஜம்மு காஷ்மீர் வீரர் சாம்பியன்.


பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தேசிய அளவிலான 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 31வது சதுரங்க
சாம்பியன்ஷிப் போட்டிகள் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 18ம் தேதி துவங்கின.
சக்தி குழும நிறுவனங்களின் நிறுவன தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கத்தின் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி டாக்டர். மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து இப்போட்டியினை நடத்தின. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 237 பேர் பங்கேற்றனர்.
நேற்று காலை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. 11 வது சுற்றில் இது வரை தோல்வியை சந்திக்காமல் 9.5 புள்ளிகள் பெற்ற ஜம்மு காஷ்மீர் வீரர் ஷோகம் கம்மோட்ரா தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹர்ஷத்துடன் டிரா செய்து பொது பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்று உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி
பெற்றார்.
2ம் போர்டில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய இன்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்ரீஹரி மஹாராஷ்டிராவைச் சேர்ந்த கிருஷ்ணன் ரித்விக்குடன் டிரா செய்து 9 புள்ளிகள் பெற்று 2ம் பரிசை வென்றார்.
4ம் போர்டில் கறுப்புக் காய்களுடன் விளையாடிய சென்னையைச் சேர்ந்த
பொள்ளாச்சியை பூர்விகமாகக் கொண்ட இளம்பரிதி கர்நாடகாவைச் சேர்ந்த ரக்ஷித் ஸ்ரீனிவாசனை வென்று 8.5 புள்ளிகள் பெற்று 3ம் பரிசை வென்றார்.
11வது சுற்றில் பெண்கள் பிரிவில் தனி முன்னிலை பெற்றிருந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ பாட்டில் தமிழகத்தின் சிந்து ஸ்ரீயுடன் டிரா செய்து பெண்கள் பிரிவு தேசிய சாம்பியன் பட்டம் வென்று உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் பிரிவில் 2 வது போர்டில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய
தமிழகத்தைச் சேர்ந்த ரிந்தியா தெலுங்கானாவைச் சேர்ந்த யாஷிவி ஜெயினை வென்று 2 வது பரிசை வென்றார்.
7.5 புள்ளிகளுடன் விளையாடிய தமிழ்நாட்டைச் சார்ந்த கனிஷ்கா வைஷ்ணவியை டிரா செய்து 3ம் இடத்தைப் பிடித்தார்.

நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சக்தி குழுமத்தின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம் தலைமை வகித்தார். ஆல் இந்தியா செஸ் பெடரேஷன் செயலாளர் பரத் சிங் சவுகான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, கல்லூரி செயலர் டாக்டர். சி. ராமசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ரத்தினவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button