
ஆனைகட்டி அடிவாரம் தடாகத்தில்
தான் பிறந்து வளர்ந்த செம்மண்காட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு இன்று அதே செம்மண் காட்டில் அடங்காமல் இருக்கும் தனது மகன் வேட்டையன் என்ற காட்டு யானையை அடக்க வந்துள்ளான் தடாகத்தின் கதாநாயகன் சின்னத்தம்பி. சின்னதம்பி பிடிபட்ட சமயத்தில் குஷ்பு என்ற பெண் யானையும் ஒரு குட்டியும் சின்னத்தம்பியை தேடி வருவதாக தமிழ்நாடு முழுவதும் செய்திகள் அதிகளவில் பரவியது. அந்த குட்டி யானை தான் வேட்டையன்.
தான் பிறந்த மண்ணை தாவி அணைத்து தன் மீது தெளித்த தருணம்.