க்ரைம்விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரும்பகுதி வன காப்புகாடு (அ) பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக இருந்து வருகிறது . கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் தென் கடைசி மலை பகுதியாக இந்த சிறுமலை அறியப்படுகிறது . இங்கு பல்வேறு வகையான மூலிகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பகுதியின் சுற்றுசூழலை மேம்படுத்த சிறுமலை ஊராட்சியும் சிறுமலை வனச்சரகமும் இணைந்து ஒரு சுற்று சூழல் மேம்பட்டு குழுவை உருவாக்கி அதற்கான வருவாயாக சிறுமலை வனச்சோதனைசாவடியில் வாகன கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் குடிமகன்களால் திறந்த வெளி மது அருந்தும் இடமாக மாறியுள்ளது . சுற்றுசூழல் மேம்பாட்டுக்கான எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. பணிகளே நடைபெறாமல் சுற்று சுழலை மெம்படுத்த என கூறி வசூலிக்கப்படும் சுற்றுசூழல் மேம்பாட்டு நிதி எங்கே செல்கின்றது என சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கின்றனர் .

புகைப்படம் : 17 வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள வனத்துறை கண்காணிப்பு கோபுர பகுதி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button