விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி.1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 – 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார்.1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர் 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தற்போது MLA – வாக இருந்து வந்தார் . தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இவரது பங்களிப்பு இருந்த நிலையில் திமுக நிர்வாகிகள் இவரது இறப்பால் சோகமடைந்துள்ளனர்.
இன்னும் சில மணி நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் வருகை தர உள்ளனர்..!
இன்னும் சில மணி நேரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் வருகை தர உள்ளனர்..!