உயிர் பலி வாங்க காத்திருக்கும். தார் சாலை..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரம் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக நீண்ட காலம் காணப்படுகிறது, மாதாபுரம் முதல் ஆழ்வார்குறிச்சி வரை படுமோசமான நிலையில் தார் சாலைகள் உள்ளது, குண்டும் குழியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கே சிரமப்படுகிறார்கள், இச்சூழ்நிலையில் இன்று மாதாபுரம் அருகே ரோட்டில் உள்ள குழியில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் விழுந்து காலில் ரத்த காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளார்,இதுபோல் அதிகமான சம்பவங்கள் கடந்த காலங்களில் இச்சாலைகளில் நடந்துள்ளன, அப்பகுதி மக்கள் எத்தனையோ முறை துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, அடுத்து உயிர் பலி வாங்கும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.. துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையை சீர் செய்திடுவார்களா..?? பொறுத்திருந்து பார்ப்போம்..!!!