தென் பொதிகை தென்காசியில் குளு குளு ஏசி பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை…
தனியார் விளம்பர ஊர்தி போல தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் குளுகுளு அரசு ஏசி பேருந்து தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு தனது சேவையை செய்து கொண்டிருந்தது . தற்பொழுது அந்த பேருந்தை கடந்த ஒரு மாதமாக காணவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்,
மழைக்காலங்களில் எல்லாம் ஓடிய ஏசி பேருந்து இந்த வெயில் காலத்தில் காணாமல் போனது ஏனென்று கேள்விகள் எழுப்புகின்றனர்..
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்ட பொழுது “எங்களுக்கு பஸ் வர வில்லை அதனால் நாங்களும் ஓட்டவில்லை என்று அற்புதமான பதிலை அளித்துள்ளார்கள் . மக்களுக்கான பேருந்து சேவையில் இந்த வெயில் காலத்தில் காணாமல் போன குளுகுளு பேருந்தை கண்டுபிடித்து மீண்டும் தென்காசி – திருநெல்வேலி சேவையை தொடர வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், செய்வார்களா…???