தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை போடப்படுகிறது, பராமரிப்பு பணி வேலை தற்பொழுது நடைபெறுகிறது,ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் புளியரை வனத்துறை அலுவலகம் முன்பு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் சிரமமின்றி பயணம் செய்யவும், விபத்துகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்
இரவு நேரத்தில் சாலையில் உள்ள பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் சாலையை சரி செய்து விபத்துகளில் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்து..