கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த நீரோடையை அழித்து அந்த இடத்தில் சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கும் மக்கும், மக்காத, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் உட்பட அனைத்து குப்பைகளையும் இந்த இடத்தில் கொட்டி பிளாஸ்டிக் குப்பை மலைகளை உறுவாக்கி வருகிறார்கள்.
இதில் முயல், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றிகள், காட்டுமாடுகள், சிறுத்தை உட்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வரும் வனப்பகுதி ஆகும். மேலும் ஆனைகட்டி தடாகம் முதல் தானிகண்டி வரை உள்ள மிக முக்கியமான யானைகளின் வலசைபாதை வழியில் இந்த குப்பை கிடங்கு அமைந்துள்ளது.
இதில் பழைய மீதமான வீணான உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழ வகைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி குப்பையில் போடுவதால் அந்த வாசனைக்கு வனவிலங்குகள் ஈர்க்கப்பட்டு அதை உண்பதால் அதிக அளவில் வனவிலங்குகள் இறப்பு ஏற்படுகிறது. யானையின் சாசனத்தில் பிளாஸ்டிக் பைகள், சாம்பார் தூள் கவர்கள், மாஸ்க், நாப்கின் போன்ற நச்சு பொருட்கள் கூட உள்ளது.
செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் செய்திகள் வெளி வந்தும் இன்றுவரை சோமையம்பாளையம் ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒருவேளை இந்த பகுதியில் உள்ள ஒட்டுமொத்த யானைகள் உட்பட வன விலங்குகள் அனைத்தும் அழிந்தால் மட்டும் தான் அந்த குப்பை கிடங்கை இடமாற்றம் செய்வார்களா என்னவோ.
வனவிலங்குகளின் அழிவை வேடிக்கை பார்க்கும் சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள்