வாணியம்பாடி, ஏப்.13- வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கில் இருந்து மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி மற்றும் நாற்றம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் மதுபான பாட்டில்களை இறக்க மினி லாரி வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து காரணமாக லாரியில் இருந்த 50 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில் சாலையில் உடைந்து வீணாகின. அப்போது சாலையில் சென்ற மது பிரியர்கள் மது பாட்டில்களை எடுத்து சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் சாலை நெடுவில் கொட்டி இருந்த மதுபான பாடில்களை அப்புற படுத்தி போக்கு வரத்து சீர் செய்தனர். இருப்பினும் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம்
குறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.