செய்திகள்

கடையநல்லூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி துபாய் சார்ஜாவில் அடுக்கு மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அதிகமானோர் வளைகுடா நாடுகளில் வேலை வார்த்து வருகின்றனர் அதில் சிலர் மனைவி பிள்ளைகளுடன் அங்கேயே தனித்தனியாக அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு பிடித்து குடும்பத்துடன் தங்கி வருகின்றனர்

ரமலான் பெருநாள் முடிந்து சிறப்பு 6 நோன்புகள் வைப்பது இஸ்லாமியர்களின் வழக்கம் அதன்படி துபாய் சார்ஜா துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மதினா நகரைச் சேர்ந்த முகைதீன் என்பவர் இரவு நேர வேலை என்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை அடுக்குமாடி குடியிருப்பில் வைத்துவிட்டு இவர் பணிக்கு சென்று விட்டார் இரவில் மனைவி சக்கினா சிறப்பு ஆறு நோன்பு வைப்பதற்காக இரவு 1மணிக்கு வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த மகள் அப்ரா வெளியில் வீசப்பட்ட விளையாட்டு பொருளை எடுக்க ஸ்டூலின் மீது ஏறி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஜன்னலைத் திறந்து எட்டிப் பார்த்த பொழுது எதிர்பாராதவிதமாக ஜன்னலில் வழியாக கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் இந்த செய்தி கடையநல்லூரில் உள்ள உறவினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் கடையநல்லூர் மதினா நகர் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகு பெற்றெடுத்த ஒரே பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது

இறந்த குழந்தை அபரா பெருநாள் அன்று பெருநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button