அரசியல்செய்திகள்டிரெண்டிங்

பா ஜ க தேர்தல் அறிக்கை – 2024 நாடாளுமன்ற தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்.
  • இலவச ரேசன் மேலும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
  • மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
  • பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
  • பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம்.
  • திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும்.
  • தமிழ்மொழியை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு.
  • முத்ரா கடன் உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
  • ஏழைகளுக்கு ஊட்ட சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம்.
  • திருநங்கைகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
  • வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • குறைந்த விலையில் பைப் மூலமாக காஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடி உடன் மருந்துகள் கிடைக்கும்.
  • சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
  • 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பெண்களுக்கு ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
  • மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • மலைவாழ் மக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகள்.
  • லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.
  • புல்லட் ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
  • நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வந்தே பாரத் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்.
  • 25 கோடிக்கு அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்பு
  • 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற இலக்கு.
  • 22 வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை
  • இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை.
  • ஊழலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை.
  • 2025ம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button