Featuredகோக்கு மாக்குக்ரைம்செய்திகள்டிரெண்டிங்விமர்சனங்கள்
Trending

இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 2002 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சத்து ஹெக்டோ் பரப்பளவிலான ஈரமான முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2001 முதல் 2022 வரை இந்தியாவில் உள்ள காடுகள் ஆண்டுக்கு 5.1 கோடி டன் அளவிலான கரியமில வாயுவை உமிழ்ந்துள்ளன. இதே காலகட்டத்தில் 14.1 கோடி டன் அளவிலான கரியமில வாயு நீக்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு மொத்தம் 8.9 கோடி டன் அளவிலான கரியமில வாயு சேமிக்கப்பட்டுள்ளது.

கரியமில வாயுவும் காடுகளும்…

கரியமில வாயு வெளியேற்றத்துக்கும் சேமிப்புக்கும் காடுகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. காற்றில் கரியமில வாயு கலந்திருந்தால் அதை நீக்குவதிலும் மரங்கள் மொத்தமாக அழிக்கப்படும்போது கரியமில வாயுவை உமிழ்வதிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையடுத்து வனங்கள் அழிக்கப்படும்போது பருவநிலை மாற்ற நிகழ்வுகளும் அதிகரிக்கின்றன.

வன அழிப்புக்கான காரணங்கள்:

மனித இடம்பெயா்வு, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவை மர அழிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் 2013 முதல் 2023 வரை 95 சதவீத வன அழிப்பு சம்பவங்கள் இயற்கை சீற்றங்களாலேயே நிகழ்ந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.

காட்டுத்தீயால் ஏற்படும் வன அழிவு:

உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், ‘ கடந்த 2015 முதல் 2020 வரை இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2001 முதல் 2022 வரை காட்டுத்தீயால் 35,900 ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 2008-ஆம் ஆண்டு 3,000 ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டதே அதிகபட்சமாகும்’ என தெரிவிக்கப்பட்டது.

அரசு ஆவணங்களின் படி மர அழிப்பு ஆண்டுகள், மாநிலங்கள்

இந்தியாவில் அதிகளவில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் குறித்து சா்வதேச வன கண்காணிப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017-இல் 1.89 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும், 2016-இல் 1.75 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும் 2023-இல் 1.44 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும் அழிந்துள்ளன.

நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா் ஆகிய மாநிலங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button