கடையம் யூனியனை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு.
கடையத்தில் உள்ள குமரேச சீனிவாசன் நகரில் அமைந்துள்ள, பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில்,
வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்கப்படாத காரணத்தால், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல், தெருவினுள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சிறு மழை பெய்தாலும் கூட, கழிவுநீர் வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே! பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில் வாறுகால் அமைத்து தரக் கோரி கடையம் ஊராட்சி மன்றம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அப்பகுதி மக்களால் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலை, புறக்கணிக்க போவதாக இரு தெரு மக்களும் அறிவித்திருந்தனர். இதனை அறிந்து அப்பகுதியை பார்வையிட்ட,
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கூறுகையில்,
சிறுபான்மை மக்கள் வாழும்
இந்தப்பகுதியில், வேண்டுமென்றே பல ஆண்டுகளாக வாறுகால் அமைத்துக் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே! உடனடியாக அதிகாரிகள் இதனை பார்வையிட்டு வாறுகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமதிக்கும் பட்சத்தில், இப்பகுதியில் வாழும் ஒட்டு மொத்த மக்களையும் திரட்டி கடையம் யூனியனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.